கோவை: “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்து, காவல் துறை தலைமை இயக்குநர் இன்று முக்கிய செய்திக் குறிப்பை வெளியிட்டார்.

காவல் துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள முக்கிய செய்திக் குறிப்பில்,
“மாண்புமிகு தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1594 மனுக்கள் காவல்துறையில் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 244 மனுக்கள் நீதிமன்றம் மற்றும் வேறு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காரணத்தினால் புகாரதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்மபந்தபட்ட துறைக்கு அனுப்பி வைத்து மனுக்கள் மீது விசாரணை முடிக்கப்பட்டது.
மீதம் உள்ள 1350 மனுக்களில், 14.07.2021 வரை 838 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட மனுக்களில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு தொடர்பாக 291 மனுக்களும், சொத்து தகராறு தொடர்பாக 278 மனுக்களும், சட்ட விரோத நடவடிக்கை கட்டுப்படுத்தக் கோரி 70 மனுக்களும், காவல் நிலைய சேவைகள் வேண்டி 51 மனுக்களும், குடும்பத் தகராறு தொடர்பாக 58 மனுக்களும், இதர காரணங்களுக்காக 190 மனுக்களும் அடங்கும்.
நிலுவையில் உள்ள 42 மனுக்கள் மீது விசாரணை நடவடிக்கை விரைவுப்படுத்தப்பட்டு இன்னும் சில நாள்களுக்குள் தீர்வு கண்டு முடித்து வைக்கப்படும்.'' என்று தெரிவித்துள்ளார்.