கோவையில் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு லோன் வாங்கி தருவதாக பிரபல மருத்துவ மனையை ஏமாற்றிய இரண்டு பேர் கைது..!

கோவை: கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக லோன் வாங்கித் தருவதாகக் கூறி 2.85கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த அறையில் பல்வேறு மோசடி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


கோவை: கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக லோன் வாங்கித் தருவதாகக் கூறி 2.85கோடி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த அறையில் பல்வேறு மோசடி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கோவை ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் மாதேஷ்வரன் கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 நபர்கள் தொடர்புகொண்டு மருத்துவமனை விரிவாக்கத்திற்கான கடன் ஏற்பாடு செய்து தருவதாக பொய் கூறி ரூபாய் 2 கோடியே 85 லட்சம் பணம் கமிஷனாகப் பெற்று ஏமாற்றி விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கோவை மாநகர ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பன்னீர்செல்வம் வீடு, அலுவலகம் அமைந்துள்ள சென்னை அடையாறு மற்றும் புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆகிய இடங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையின்போது ஏராளமான கையெழுத்திட்ட நிரப்பப்படாத முத்திரை தாள்கள், புரோ நோட்டுகள், காசோலைகள், பல்வேறு நபர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்தநிலையில், சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம், செல்வகுமார் ஆகியோரை கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு சொகுசு கார்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சைலேஷ் பிரபாகர் சிங்கர் என்பவர் பெயருக்கு அகமதாபாத் ஆக்சிஸ் வங்கியில் பெறப்பட்ட ரூ.49.85 கோடி மற்றும் அதே தொகையான ரூ.49. 85 கோடிக்கு 2 போலியான வரவோலைகளும் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடந்த 2010ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் 2 கிலோ தங்கம் தருவதாக கூறி ரூபாய் 10 லட்சம் பெற்றுக்கொண்டு தங்கம் தராமல் ஏமாற்றியதுடன், அதற்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது ரூ.5 லட்சம் கள்ளநோட்டு வழங்கிய வழக்கு பன்னீர்செல்வம் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பன்னீர்செல்வம் மீது தமிழகம் முழுதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...