கோவை: கோவை மாநகர் பகுதியில் உள்ள 20 காவல் நிலையங்களில் புகார்களை பெற்று உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கும் வகையில், இன்று முதல் பெண் காவல் வரவேற்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
கோவை: கோவை மாநகர் பகுதியில் உள்ள 20 காவல் நிலையங்களில் புகார்களை பெற்று உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கும் வகையில், இன்று முதல் பெண் காவல் வரவேற்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
கோவை மாநகர் பகுதியில் உள்ள 15 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 3 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 2 போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்களில் இன்று முதல் சுழட்சி முறையில் பெண் காவல் வரவேற்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காலை 7 மணி முதல் 2 வரையும், 2 மணி முதல் 9 மணி வரை பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொண்டு பிரச்சனையை உள்வாங்கி புகார்களை பெறுகின்றனர். இதற்கான 18 லேப்டாப்புகள் வழங்கப்பட்டு, தினமும் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்புகின்றனர்.
பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள ஏதுவாக வரவேற்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 40 பெண் காவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறையினர் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடையே இனக்கமான உறவை ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர காவல் துறையில் ஆணையர் தீபக்தமோர் உத்தரவின் பேரில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.