கோயம்புத்தூரைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ் 2021 விருது

கோவை: டேலி எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ் 2021 விருது கௌரவத்தின் முதல் பதிப்பில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஃபிஷர் பம்ப்ஸ், சான்வி அக்ரிகல்ச்சரல் ப்ராடக்ட்ஸ் மற்றும் மகேந்திரா பம்ப்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.


டேலி எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ் கௌரவ விருது என்பது அடிமட்டத்திலிருந்து பங்காற்றி தேசிய பொருளாதார நிலை வரை உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றத்தை உருவாக்குபவர்களின், பன்முகத்தன்மை மற்றும் இடைவிடாத பங்களிப்புகளைக் கௌரவித்து அங்கீகரிக்கும் ஒரு முன் முயற்சியாகும். சர்வதேச எம்.எஸ்.எம்.இ தினத்தையொட்டி இந்த கௌரவம் மற்றும் விருது வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் 250 கோடி ரூபாய்க்கும் குறைவான வருவாய் மற்றும் தகுதியான ஜி.எஸ்.டி பதிவு கொண்ட அனைத்து வகையான வணிகங்களுக்கும் இந்த கௌரவம் மற்றும் விருதுகள் பொருந்தும்.

ஃபிஷர் பம்ப்ஸ் நிறுவனம் ஐடியா ஐகான் (புதுமைச் சிந்தனை அடையாளம்) என்ற பிரிவில் கௌரவத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் முன்கள சுகாதார ஊழியர்களுக்கு காற்று சுத்திகரிப்பு சுவாசக் கருவியைக் கண்டுபிடித்ததற்காக இந்த நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 க்கு எதிரான நடவடிக்கைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தனி நபர் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் உபகரணங்கள் (பிபிஇ கிட்) பிரிவில் இது வருகிறது. இது 99.9 சதவிகித சுத்திகரிக்கப்பட்ட காற்று மற்றும் முழு முகப் பாதுகாப்பை வழங்குகிறது.



சான்வி அக்ரிகல்ச்சரல் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.பரமேஸ்வரி ஆகியோர் வியக்கத்தக்க பெண்கள் பிரிவில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். நிலையான விவசாயப் பொருட்கள் பிரிவில் புதுமைகளை கண்டுபிடித்ததற்காகவும், வெற்றிகரமான வணிகத்தை ஏற்படுத்தியதற்காகவும், வணிகத்தில் பெண்களை ஊக்குவித்து சிறந்த அடையாளமாகத் திகழ்வதற்காகவும் இவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். மலர் வளர்ப்பு, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை ஆகியவற்றில் சரியான தரமானவற்றைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் நோக்கில் இவர்களின் அனைத்து தயாரிப்புகளும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் வெவ்வேறு கட்டங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இவை தயாரிக்கப்படுகின்றன.

மறுபுறம் மகேந்திர பம்ப்ஸ் நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக மோட்டார்கள் மற்றும் பம்புகள் சந்தையில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் அயராத முயற்சிகளுக்காக பிசினஸ் வெட்ரன் (புகழ்பெற்ற தொழில் நிறுவனம்) பிரிவில் இது கௌரவிக்கப்பட்டுள்ளது.

தமது முதல் பதிப்பில், டேலி எம்.எஸ்.எம்.இ ஹானர்ஸ், தமிழ்நாட்டில் 7 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களையும் (எம்.எஸ்.எம்.இ.), நாடு ழுழுவதும் 81 நிறுவனங்களையும் கௌரவித்துள்ளது. நான்கு மண்டலங்களில் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு மண்டலங்களில் ஐந்து பிரிவுகளில் கௌரவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிசினஸ் வெட்ரன்ஸ் (முன்னணி தொழில் நிறுவனங்கள்): பல்வேறு காலகட்டங்களில் பல சோதனைகளத் தாண்டி, தொடர்ந்து செழித்து வளர்ந்து வரும் உறுதியான நிறுவனங்களை அங்கீகரிக்க இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் டிரான்ஸ்ஃபார்மர்ஸ்: புதிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலைத் தழுவி சாதனை படைக்கும் நிறுவனங்களை அங்கீகரிக்க இந்த கௌரவம் வழங்கப்படுகிறது

வியக்கத்தக்க பெண்மணிகள் எம்எஸ்எம்இ-ஸ் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் வியக்கத்தக்க பெண்மணிகள்: பழைமைவாத கட்டுப்பாடுகளை மீறி, தங்கள் வணிக பயணத்தை நம்பிக்கையுடன் வரையறுத்த பெண் தொழில் முனைவோர்களை அங்கீகரிக்க இந்த கௌரவம் வழங்கப்படுகிறது

சோஷியல் பேட்ரன்ஸ்: லாபம் ஈட்டுவதற்கு முன் சோதனைக் காலங்களிலும் சமூகத்திற்கு உதவி செய்தவர்களை அங்கீகரிக்க இந்த கௌரவம் வழங்கப்படுகிறது

ஐடியா ஐகான்ஸ் (புதுமைச் சிந்தனை அடையாளம்): மாற்றத்தை வழிநடத்தும் கருத்துகள் மற்றும் புதுமைச் சிந்தனைகளை அங்கீகரிக்க இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...