கோவையில் பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் நகைகளை அபேஸ் செய்த ஆசாமி... போலீஸார் விசாரணை..!

கோவை: வங்கி லாக்கரில் தங்கம், வெள்ளி நகைகள் வைப்பதற்காக பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் நகைகளை அபேஸ் செய்து பலே ஆசாமி கைவரிசை.


கோவை: வங்கி லாக்கரில் தங்கம், வெள்ளி நகைகள் வைப்பதற்காக பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் நகைகளை அபேஸ் செய்து பலே ஆசாமி கைவரிசை.



இதனைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தன் வீட்டில் நகை, தங்கம், வெள்ளி பொருட்கள் இருந்தால் பாதுகாப்பாக இருக்காது என வங்கி லாக்கரில் வைப்பதற்காக மூதாட்டி ஒருவர் பஸ்ஸில் ஏறி வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். பஸ்சில் மூதாட்டியின் பின்னால் நின்ற மர்ம ஆசாமி, மூதாட்டியின் நகைகளை அபேஸ் செய்து தப்பினார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள நல்லாம் பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் இவரது மனைவி கண்ணம்மாள் வயது 61, இவர் தனது தங்கச் செயின் மற்றும் வெள்ளி பொருட்களை வங்கி லாக்கரில் வைக்க திட்டமிட்டார். அதன்படி நேற்று இவர் தன்னுடைய மூன்று பவுன் தங்கச் செயின், வெள்ளி பொருள்கள் மற்றும் மெட்டி, மோதிரம் உட்பட பல்வேறு பொருட்களை வங்கி லாக்கரில் வைப்பதற்காக லாக்கர் சாவியை எடுத்துக் கொண்டு அவற்றை அனைத்தையும் கைப்பையில் வைத்துக் கொண்டு காந்திபுரம் ஜிபி சிக்னல் அருகே உள்ள வங்கி லாக்கரில் வைப்பதற்காக பஸ்ஸில் புறப்பட்டார். பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கண்ணம்மாள் வைத்திருந்த கைப்பையை அபேஸ் செய்து தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணம்மாள் இதுகுறித்து காட்டூர் போலீஸில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூதாட்டியிடம் நகைகளுடன் கைப்பையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...