கோவையில் பெருகி வரும் போதை கலாசாரத்தை ஒழிப்பது மற்றும் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தரமற்ற பணிகளை சீரமைப்பது தொடர்பாக அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு மனு..!

கோவை: கோவையில் பெருகி வரும் போதை கலாசாரத்தை ஒழிப்பது மற்றும் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தரமற்ற பணிகளை சீரமைப்பது தொடர்பாக அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் பெருகி வரும் போதை கலாசாரத்தை ஒழிப்பது மற்றும் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தரமற்ற பணிகளை சீரமைப்பது தொடர்பாக அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது.



கோவை அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் நிர்வாகிகள் உபைதுர் ரஹ்மான், ஜாபர் சாதிக் மற்றும் காசிம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையர் அலுவலகங்களில் மனு ஒன்று வழங்கப்பட்டது. மனுவில், ‘‘கோவை மாநகராட்சி 86வது வார்டிற்கு உட்பட்ட பகுதியான அண்ணா நகர், அல் அமீன் காலனி, ரோஸ் கார்டன், பிலால் எஸ்டேட், பொன்விழா நகர், அன்பு நகர் மற்றும் சில பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்தப் பகுதிகளுக்கு என தனியாக தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டியும், மேலும் சமீப காலமாக எங்கள் பகுதியில் 15 வயதிற்குட்பட்ட சிறு வயதினர் மற்றும் இளைஞர்கள் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி பெரும் ஆபத்தில் உள்ளனர்.

இவை கோவையில் மட்டுமல்ல, பெரும்பாலான மாவட்டங்களில் இதுபோன்ற தீய செயல்கள் நடைபெறுவதை அவ்வப்போது பத்திரிகையின் வாயிலாக அறிய முடிகிறது. கஞ்சா மற்றும் போதை பொடிகள் மட்டுமல்லாமல் பெயிண்ட் தின்னர், வலி மாத்திரைகள், ஊசிகள், இருமல் மருந்து மற்றும் பல பொருட்களை போதைப் பொருட்களாகப் பயன்படுத்தி போதைக்கு அடிமையாகி உள்ளதால், இதனை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து, நடவடிக்கை எடுப்பது, கடந்த கால ஆட்சியின் போது செய்யப்பட்ட பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளில் செய்யப்பட்ட தரமற்ற பணிகளை சீர் செய்வது'' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது. இதில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மிக்சி காதர், ஜாகீர், அசாருதீன், ஆசாத், சிராஜ்தீன், அபி, அர்சத், உசேன், ஹக்கீம், ஜாஃபர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...