கோவையில் பைக் திருடன் கைது... ஏழு பைக்குகள் பறிமுதல்..!

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இருசக்கர வாகனங்களை திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இருசக்கர வாகனங்களை திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, ஆர்.எஸ். புரம், துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடைபெற்றது. மேலும், திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்தநிலையில், போலீஸ் தேடுதல் வேட்டையில் இந்த திருட்டில் ஈடுபட்ட சரவணம்பட்டி அண்ணா நகரை சேர்ந்த குஞ்சன் என்ற விவேகானந்தன்(48) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் குஞ்சனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அவரிடம் இருந்து ஆறு மொபட், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

குஞ்சன் மீது ஏராளமான இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. கைதாகி சிறையில் இருந்து வெளிவந்த குஞ்சன் மீண்டும் இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இருசக்கர வாகனங்களை குஞ்சன் திருடினால் உடனடியாக கோவையில் இருப்பது இல்லை. அவற்றை மேட்டுப்பாளையம், கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்று பணத்தை ஜாலியாக செலவழித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...