குளத்தூரில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விலை உயர்ந்த கோழிகள் திருட்டு..!

கோவை: சூலூர் அருகே குளத்தூர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை இரவு ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மேலும், அங்கிருந்து 10 விலை உயர்ந்த சேவல்களை திருடிச் சென்றனர். இதுபற்றி சூலூர் காவல்துறையில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: சூலூர் அருகே குளத்தூர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை இரவு ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மேலும், அங்கிருந்து 10 விலை உயர்ந்த சேவல்களை திருடிச் சென்றனர். இதுபற்றி சூலூர் காவல்துறையில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சூலூர் அருகே நீலம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தூர் பகுதி உள்ளது. இங்கு அடிக்கடி திருட்டு மற்றும் குற்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இதனைத் தடுக்க போலீஸாரின் அறிவுரையின்படி பல வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை குளத்தூரில் தட்டான் தோட்டம் பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவரது வீட்டில் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்த விலை உயர்ந்த 10 கோழிகளைத் திருடிச் சென்றனர்.



மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர். சில கேமராக்களை அதன் திசையை மாற்றி திருப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டிலும் மதில் சுவர் தாண்டி உள்ளே வந்து நோட்டமிட்டு உள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்தன, சத்தம் கேட்டு வீடுகளில் விளக்குகள் எரிந்ததால் உடனடியாக அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும் போது அவர்கள் கொண்டுவந்த கத்தி, கொடுவாள் மற்றும் அரிவாள் ஆகிய ஆயுதங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இந்த திருட்டில் ஐந்து பேர் ஈடுபட்டிருப்பது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.

புதன்கிழமை காலை இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சூலூர் ஒன்றிய கவுன்சிலர் தாரணி ஜெகதீஷ் ஆகியோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராக்களில் உள்ள காட்சிகளின் உதவியுடன் மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...