கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களை தடுப்பதற்கு முன்களப்பணியாளர்கள்‌ பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்‌ என்று கூறினார்.



கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களை தடுப்பதற்கு முன்களப்பணியாளர்கள்‌ பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்‌ என்று கூறினார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ காளப்பட்டி, ஒண்டிப்புதூர்‌ மற்றும்‌ உடையாம்பாளையம்‌ ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., இன்று(15.07.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.33 மற்றும்‌ 34க்குட்பட்ட காளப்பட்டி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலக வளாகத்தில்‌ முன்களப்பணியாளா்களிடம்‌ ஆணையாளர்‌ தெரிவிக்கையில்‌,

‘‘முன்களப்பணியாளா்கள்‌, வீடு வீடாகச்‌ சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல்‌, இருமல்‌, மூச்சுத்திணறல்‌, உடல்‌ சோர்வு, உடல்‌ வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜன்‌ அளவு, ஆகிய பணிகளை கண்டறியும்போது, கண்டறியப்பட்ட விவரங்களை குறித்து கோவிட்‌- 19 களஆய்வு பதிவேடுகளில்‌ பதிவு செய்ய வேண்டும்‌. வீட்டில்‌ உள்ள அனைவருக்கும்‌ பரிசோதனை செய்திட வேண்டும்‌. கொரோனா பெருந்தொற்று தடுப்புப்பணிகளில்‌ ஈடுபடும்‌ முன்களப்பணியாளார்கள்‌ பணி மிக முக்கிய பணியாகும்‌. இப்பணிகளை மிகவும்‌ சிறப்பாக செய்திட வேண்டும்‌. பணி மேற்கொள்ளும்போது தவறாமல்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திட வேண்டும்‌. தடுப்பூசி போடாதவர்கள்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌'' என தெரிவித்த பின்னர்‌,

‘‘கோயம்புத்தார்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளவர்கள்‌ மருந்துக்கடைகளில்‌ மருந்து மாத்திரைகள்‌ வாங்கியவா்களின்‌ பட்டியல்‌ பெறப்பட்டதில்‌, வார்டு 36க்குட்பட்ட மருந்து கடைகளில்‌ சளி, காய்ச்சலுக்கு மருந்து வாங்கியவர்களின்‌ பட்டியல்‌ பெறப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில்‌ அவர்களில்‌ ஆறு நபர்களுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, மாநகராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து மருத்துவ மனைகள்‌ மற்றும்‌ மருந்துக்கடைகளில்‌ சளி, காய்ச்சல்‌ உள்ளவாகளின்‌ விவரங்களை மாநகராட்சி சுகாதார அலுவலர்களுக்கும்‌ மற்றும்‌ ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டறையின்‌ [email protected] என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு தகவல்‌ தர வேண்டுமென தெரிவித்தார்கள்‌.

முன்களப்பணியாளர்கள்‌ கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களை தடுப்பதற்காக பொதுமக்களிடம்‌ வீடுகள்‌ மற்றும்‌ சுற்றுப்புறத்தில்‌ தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள டயர், தேங்காய்‌ சிரட்டைகள்‌, உடைந்த குடங்கள்‌, உபயோகமற்ற பொருட்கள்‌, உடைந்த சிமென்ட்‌ தொட்டிகள்‌ முதலியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்‌. மேல்நிலை தொட்டி, கீழ்நிலைத்‌ தொட்டி ஆகிய தண்ணீர் தொட்டிகள்‌ முதலியவற்றை கொசுக்கள்‌ மற்றும்‌ கொசுப்புழு புகாவண்ணம்‌ மூடி வைக்க வேண்டும்‌. தண்ணீர் நிரம்பிய பூ ஜாடி மற்றும்‌ கீழ்‌ தட்டு, குளிர்சாதனப்பெட்டியின்‌ கீழ்‌ தட்டு, மணி பிளான்ட்‌ ஆகியவற்றில்‌ தங்கியுள்ள தண்ணீரை மூன்று நாட்களுக்கொருமுறை அகற்றிட வேண்டுமென பொதுமக்களிடம்‌ போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்‌'' என தெரிவித்தார்கள்‌.



தொடர்ந்து, வார்டு எண்‌.61க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌ பகுதியில்‌ 60 எம்‌.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்‌ கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தொடர்ந்து, ஒண்டிப்புதார்‌ கழிவுநீர் பண்ணை அருகில்‌ வீடில்லா நாய்கள்‌ கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில்‌ ஆய்வு மேற்கொண்டு, நாய்களுக்கு முறையான மருத்துவம்‌ மற்றும்‌ பராமரிக்கப்படும்‌ முறைகள்‌ குறித்து கேட்டறிந்தார்கள்‌.



தொடர்ந்து, வார்டு எண்‌.66க்குட்பட்ட உடையாம்பாளையம்‌, கருவலூர்‌ மாரியம்மன்‌ கோயில்‌ தெருவில்‌ உள்ள அபார்ட்மென்ட்‌ குடியிருப்புப்‌ பகுதியில்‌ அமைந்துள்ள அனைத்து வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பைகள்‌, மக்கா குப்பைகள்‌ என தனித்தனியாக தரம்‌ பிரித்து சேகரிக்கப்பட்டுவரும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ முருகன்‌, செயற்பொறியாளர்கள்‌ பாபு, சரவணக்குமார்‌ (ஸ்மார்ட்‌ சிட்டி), மண்டல சுகாதார அலுவலர்‌ சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...