கோவை: பொள்ளாச்சியில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பதுக்கி வைத்து கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்கும் அரிசியை பெற்றுக் கொண்டு, சிலர் திப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் குடோனில் பதுக்கி வைத்து கேரளாவுக்கு அதிக விலைக்கு கடத்க்ச் சென்று விற்பனை செய்வதாக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் திப்பம்பட்டி பகுதியிலுள்ள சந்தேகத்துக்கிடமான குடோனில் அதிரடி ஆய்வு நடத்திய போது, அங்கு பல்வேறு பெயர்களில் மூட்டை மூட்டையாக சுமார் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது தவ்ஃபிக் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முகம்மது தவ்ஃபிக் என்பவர் பொதுமக்களிடம் ரேஷன் அரிசி பெற்றுக்கொண்டு அதை பல்வேறு பெயர்களில் மூட்டையாகக் கட்டி கேரளாவுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாகத் தெரியவந்தது.

இதையடுத்து வருவாய்த்துறை சார்பில் கோமங்கலம் காவல் துறையிடம் புகார் தெரிவித்ததை அடுத்து நியாய விலைக் கடை அரிசியை குடோனின் வைத்து கேரளாவுக்கு கடத்திய முகமது தவ்ஃபிக்கை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.