வால்பாறை பகுதியில் பேருந்துகள் உரசிக் கொண்டதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு..!

கோவை: வால்பாறை பகுதியில் உள்ள குமரன் சாலையில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கோவை: வால்பாறை பகுதியில் உள்ள குமரன் சாலையில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு வழி சாலை மட்டுமே உள்ள நிலையில், சுமார் 2 மணி அளவில் வால்பாறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சிலை பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்த பேருந்தும் காந்தி சிலை பேருந்து நிலையத்திலிருந்து எஸ்டேட் பகுதிக்கு செல்வதற்காக வந்த பேருந்தும் குமரன் சாலையில் வழி கொடுக்க முடியாமல் இரண்டு பேருந்தும் உரசிக் கொண்டது.



இதில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு எதுவும் இல்லை.



ஆனாலும், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இருபுறமும் வாகனங்கள் கொட்டும் மழையில் செல்ல வழியின்றி நின்று கொண்டு இருந்ததால், பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது.

அதன்பின்னர், காவல்துறையினர் வந்து வாகனங்களை தடம் மாற்றி, பேருந்து போக்குவரத்தை சீர் செய்தனர். புதிய பேருந்து டிப்போவில் இருந்து காந்தி சிலை பேருந்து வரை இரு புறங்களும் தங்களது சொந்த வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைப்பதாலும் பழைய இரும்பு கடைகள் உள்ள பொருட்களை சாலை ஓரத்தில் போட்டு வைப்பதால் இடம் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்ய அரசு பேருந்து ஓட்டுனர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...