கோவை: வால்பாறையில் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக 200 ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின ஆதிவாசி மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் 13 செட்டிமென்டுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வருவதில்லை. இந்தநிலையில், ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் அறிவுரையின் பேரில் வனத்துறையினர் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக கீழ் பூனாட்சி, வெள்ளி முடி, நெடுங்குன்றம், சங்கரன்குடி, பால கிணறு, பரமன் கடவு ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக 200 ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. இதில், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.