கோவையில் மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு!

கோவை: கோவையில் மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் மின்வாரிய பணியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை டவுன்ஹால் பகுதியில் துணை மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் முரசொலியில் (45) என்பவர் வயர் மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்வாரிய பணியில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், முரசொலிக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக அதிகாரிகள் அவரது சான்றிதழ்களை சரிபார்த்த போது, அது போலியானது என்பது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து துணைமின் நிலைய உதவிப் பொறியாளர் கனிமொழி என்பவர் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு முரசொலி பணியில் சேரும் போது, தான் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளதாக போலியாக சான்றிதழ் தயாரித்து, அதனை கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...