கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

கோவை மாநகரில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று உக்கடம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்திய போது, அந்த ஆட்டோவில் சிறிய மூட்டைகளாக ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. அவை கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, கோவை பகுதியைச் சேர்ந்த தவமணி (48) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே, கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். கடத்தலை தடுப்பதற்காக தொடர்ந்து போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.