கோவை: கோவை வால்பாறையில் கனமழையால் படகு இல்லத்தில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால், அருகில் இருக்கும் அரசு தங்கும் விடுதி ஆய்வு மாளிகையான நகராட்சிக்கு சொந்தமான யாத்ரி நிவாஸ் கட்டடத்திற்குள்ளும் தண்ணீர் நுழைந்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை அருகே உள்ள நடுமலை ஆறு மற்றும் சிறுவர் பூங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு புதிதாக படகு இல்லம் ஒன்றை அமைக்கும் பணி நகராட்சி சார்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது, மழையால் படகு இல்லத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது.

படகு இல்லத்தில் தண்ணீர் நிரம்பி வருவதால், அருகில் இருக்கும் அரசு தங்கும் விடுதி ஆய்வு மாளிகையான நகராட்சிக்கு சொந்தமான யாத்ரி நிவாஸ் கட்டடத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது. தற்போது சமூக நல அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில், தற்போது தண்ணீர் புகுந்து வருவதால் வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இன்று யாரும் பணியில் இல்லாததால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உள்ளது. படகு இல்லத்தின் தண்ணீரை வெளியேற்றினால் யாத்ரி நிவாஸ் கட்டடத்தில் உள்ள தண்ணீர் குறையும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், வால்பாறை அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் அளவு இன்று(15/07/2021) காலை 6 மணி கணக்கெடுப்பின்படி,
வால்பாறை : 42 மி மீ
சின்னக்கல்லார்: 88 மி மீ
நீரார் அணை : 40 மி மீ
சோலையார் அணை : 32.மி மீ மழை அளவு பதிவாகி உள்ளது.