கோவை: வால்பாறையில் பெய்த தொடர் மழையால் கீழ்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் படிக்கட்டு இடிந்து சரிந்து சேதமடைந்துள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் பெய்த தொடர் மழையால் கீழ்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் படிக்கட்டு இடிந்து சரிந்து சேதமடைந்துள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து கடும் குளிர் நிலவுகிறது
மேலும், பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி மின் விநியோகம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், வால்பாறை நகரை ஒட்டியுள்ள அண்ணாநகர் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகில் மேலிருந்து கீழ் பகுதிக்குச் செல்லும் படிக்கட்டு இடிந்து சரிந்து உள்ளது.

இதில் ஐந்து படிக்கட்டுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக அவ்வழியே செல்லும் பொதுமக்கள் வழியில்லாமல் வேறொரு வீட்டின் வழியாக சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இப்படிக்கட்டு நகராட்சிக்கு சொந்தமானதாகும்.

இதனிடையே, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.