கோவையில் பூ பறித்து கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு - போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் பூ பறித்து கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் பூ பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் இது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இரவு மற்றும் பகல் நேரங்களில் இதற்கென தனிப்படை அமைத்து தீவிர ரோந்து பணியில், சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வாழ்வாதாரம் இழந்த ஒரு சில நபர்கள் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெண்கள் அணிந்து செல்லக்கூடிய நகைகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மனைவி விஜயா (55), இவர் நேற்று மாலை வீட்டின் முன்புறம் உள்ள அவருடைய செடிகளில் பூ பறித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் வீடு வாடகைக்கு கிடைக்குமா? என்பது போல பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு விஜயா மிகுந்த ஆர்வத்துடன் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென விஜயா கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் புறப்பட்டனர். விஜயா சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இது குறித்து, விஜயா கொடுத்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று செயின் பறிப்பு சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...