கோவை: கோவை, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் கொட்டும் மழையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கேஸ் சிலிண்டரை வைத்து கும்மியடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் கொட்டும் மழையில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் கேஸ் சிலிண்டரை வைத்து கும்மியடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்ட ஜனநாயக மாதர் சங்க செயலாளர் ராதிகா தலைமையில் பொள்ளாச்சி தலைமை தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையை பொருட்படுத்தாத பெண்கள், கேஸ் சிலிண்டரை வைத்து கும்மியடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு மாதர் சங்க செயலாளர் ராதிகா அளித்த பேட்டியின்போது, கேஸ் விலை உயர்வால் வங்கியில் மானியத் தொகை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, உயர்ந்து கொண்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றார்.