கோவை பி.என்.புதூரில் 50 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூர் பகுதியில் 50 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர்.


கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூர் பகுதியில் 50 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர்.

கோவை மாநகராட்சி சார்பாக நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக, வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூர் கோகுலம் காலனி பகுதியில் கிருஷ்ணாம்பதி குளத்திற்குச் செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 50 வீடுகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.



இதுகுறித்து மாநகராட்சி நகர திட்டமிடல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "75 ஆண்டுகளாக கிருஷ்ணாம்பதி குளத்திற்குச் செல்லும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இன்று இடித்து அகற்றப்பட்டன," என்றார்.



வீடுகளை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...