கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள வேடசந்தூர் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள வேடசந்தூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த சர்குணம் மூர்த்தி என்பவர் குருக்களாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் இன்று கோவிலை திறக்க வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கோவிலில் வைக்கப்பட்டிருந்த பெரிய உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வைத்து திருட்டு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அதே பகுதியில் கோவிலுக்கு அருகில் செந்தில் என்பவருக்கு சொந்தமான பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக உண்டியல் திறக்கப்படாததால் தற்போது உண்டியலில் திருட்டுப்போன பணத்தின் மதிப்பு சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதனிடையே, கோவிலிலும் அருகிலுள்ள வீட்டிலும் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ஆழியார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.