கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான கப், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட நபரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சரவணம்பட்டி e3 உதவி காவல் ஆய்வாளர் ஜெயக்குமாரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 41, lig 1684 காந்தி மாநகர், அன்சார் அலி என்பவரின் வீட்டில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைத்திருப்பதாக தகவல் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் வடக்கு மண்டல உதவி ஆணையாளர் திருமதி. மோகனசுந்தரி, சுகாதார ஆய்வாளர் சலேத் மற்றும் சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோரின் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டதில் தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் சுமார் 425 kg இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை மாநகராட்சி மக்காத குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பந்தப்பட்டவருக்கு ரூபாய்.5000/-அபராதம் விதிக்கப்பட்டது.