கோவை: ஆன்லைன் மூலமாக பாடம் படிக்க செல்போன் வசதி இல்லாததால் பிளஸ் 1 மாணவர் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகா புரத்தைச் சேர்ந்த பாண்டி கூலித்தொழிலாளி. இவரது மகன் அருள்செல்வம் வயது 15. இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், அருள் செல்வம் வீட்டில் இருந்தபடி பாடம் படித்துவந்தார். தற்போது ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அருள்செல்வம் தனது தந்தையிடம் தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி கேட்டார். அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை இரண்டு நாள் கழித்து வாங்கித்தருவதாக கூறினார்.
இதனால், அருள் செல்வம் மிகுந்த மனவேதனை அடைந்தார். நேற்று வீட்டில் இருந்த அவர் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினார்கள். இதுகுறித்து துடியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.