கோவை: வால்பாறையில் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதின் அவசியம் குறித்து துணை இயக்குநர் ஆரோக்கிய சேவியர் அறிவுரைப்படி, முன் களப்பணியாளர்கள் ஆதிவாசி மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில், இன்று வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஹைபோர்ஸ்ட் வேட்டை தடுப்பு முகாமில் வைத்து மலைவாழ் மக்களுக்கு நோய்த் தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் சங்கரன் குடி, பரமன் கடவு மற்றும் உடுமன் பாறை மலைவாழ் மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், மலைவாழ் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் முதற்கட்டமாக வனத்துறை களப்பணியாளர்கள் 10 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக மலைவாழ் மக்கள் சுமார் 80 நபர்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி போடப்பட்டது.