கோவை: தமிழகத்தில் உள்ள தேயிலை, காப்பி தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தோட்ட தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம், தேனி மாவட்டம், சேலம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம்(மாஞ்சோலை) ஆகிய இடங்களில் தேயிலை, காப்பி தோட்டங்களில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இத்தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடுமையான மழை, பனி, வெயில் காலங்களில் மலை சுவடுகளில் நின்று பணிபுரிந்து வருகிறார்கள். கொடிய மிருகங்கள், அட்டைக்கடி, விஷப்பாம்புகள் போன்ற தாக்குதலுக்கு தன் உயிரை பணையம் வைத்து பணிபுரிந்து வருகின்றனர்.
உயிரைப் பணையம் வைத்து பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையோ, பரிதாபத்திற்குரியதாக உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஓட்டு வீடு, சரியான சுகாதார வசதிகள் இல்லை. கழிப்பிட வசதிகள் இல்லை. காப்பக வசதியும் இல்லை. வேலை செய்வதற்குரிய கவசங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆனால், இவர்கள் நாளொன்றுக்கு பெறும் கூலியோ ரூ.340/- மட்டுமே. நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
1. ஏழாவது மத்திய ஊதியக் குழு 01.01.2016 முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசின் கடைநிலை ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18,000/-
2. அக்டோபர் 2020 அன்று 7.61% ஆக இருக்கும் விலைவாசி குறியீட்டு விகிதம் மே 2014க்குப் பின் பதிவான அதிகபட்ச விலைவாசி குறியீட்டு விகிதமாகும்.
3. உணவுப் பொருட்களின் விலை கடந்த இரண்டாண்டில் 11.01% காய்கறி 22.21% முட்டை 21.81% மாமிசம் மற்றும் மீன் 18.7% பருப்பு 18.37% ஆக உயர்ந்திருப்பதாக அரசாங்கத்தின் கணக்குகள் கூறுகின்றன.
4. 15வது இந்திய தொழிலாளர் ஆணையத்தின் பரிந்துரையும், ரெப்டகாஸ் Vs ப்ரெட் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
5. இந்த பரிந்துரையை 2012ம் ஆண்டு கூடிய 44ஆவது இந்திய தொழிலாளர் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் தொழிலாளியின் குடும்பத்தின் அளவு 3 நுகர்வோர் அலகு (2 வயது வந்தோர் + 2 குழந்தைகள்)
6. Dr.அக்ரோய்ட் பரிந்துரையின்படி ஒவ்வொருவருக்கும் உயிர் வாழ ஒரு நாளைக்கு 2700 கலோரி ஆற்றல் அளிப்பதற்கான உணவு தேவை.
7. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு 72 கெஜம் (சுமார் 66 மீட்டர்) துணி தேவை.
8. அரசாங்கத்தின் தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் குறைந்தபட்ச பரப்பளவு கொண்ட வீட்டுக்கான வாடகை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும். குறைந்த வருவாய் ஈட்டுவோர் மனையின் பரப்பு 400 சதுரடி ஆகும்.
9. இவ்வாறு கணக்கிடும் சம்பளத் தொகையில் கூடுதலாக எரிபொருள், மற்றும் எதிர்பாராத செலவு தொகைக்கான தொகை 20% சேர்க்க வேண்டும்.
10. குழந்தைகள் கல்வி, மருத்துவச் செலவு, பண்டிகை செலவுகள், முதுமை காலத்திற்கான பாதுகாப்பு, திருமண செலவுகள் உள்ளிட்டவற்றிற்கு மேலே கூறிய சம்பளத்தில் இன்னொரு 25% கூடுதலாக சேர்க்க வேண்டும்.
மேற்காணும் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
எனவே, அமைச்சர் அவர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு சம்பளம் 692.80/- என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய சம்பந்தப்பட்ட தோட்ட அதிபர்கள் அமைப்பையும், தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.