கோவை மாநகராட்சி தெற்கு மண்டலப் பகுதிகளில்‌ தூய்மை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலப் பகுதிகளில்‌ தூய்மைப்‌ பணிகள்‌, வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ,.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வளர்ச்சிப்‌ பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.



கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலப் பகுதிகளில்‌ தூய்மைப்‌ பணிகள்‌, வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ,.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வளர்ச்சிப்‌ பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்‌ பணிகள்‌, பல்வேறு வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப. இன்று(14.07.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.85 சுகாதார ஆய்வாளர்‌ அலுவலக வளாகத்தில்‌ தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவிக்கும்‌ போது, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ வருகை தந்து தங்களது பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்‌. வீடு வீடாகச்‌ சென்று குப்பைகளை சேகரிக்கும்போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்க வேண்டும்‌.



மழைநீர்‌ வடிகால்‌ கால்வாயில்‌ அடைபட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி வடிகாலில்‌ நீர் செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்‌. தடுப்பூசி போடப்படாதவர்கள்‌ தடுப்பூசிகளைப் போட வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாக திகழ தங்களது பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும்‌ என அறிவுரைகள்‌ வழங்கினார்.



தொடர்ந்து, சுண்டக்காமுத்தூர்‌ ரோடு சேத்துமாவாய்க்கால்‌ பகுதியில்‌ பாலம்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னா்‌, வார்டு எண்‌.89 பாலாஜி நகா்‌ பகுதியில்‌ 15 இலட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட பணிகள்‌ முடியும்‌ தருவாயில்‌ உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்ட பின்னர்‌, வார்டு எண்‌.89 அன்பு நகா்‌ பகுதியில்‌ 2.50 இலட்சம்‌ லிட்டர் கொள்ளளவு கொண்ட கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில்‌ உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.86 ஆத்துப்பாலம்‌ மின்மயானத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர்‌ வெள்ளலூரில்‌ ரூ.168 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாகக் கட்டப்பட்டுவரும்‌ புதிய பேருந்து நிலையத்தின்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்ட பின்னா்‌ சீர்மிகு நகரத்‌ திட்டத்தின்கீழ்‌ உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பேஸ்‌-1 பகுதியில்‌ 3.85 கி.மீட்டர் தூரத்திற்கு குளக்கரையினை அழகுபடுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளா்‌ இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன்‌, செயற்பொறியாளர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி சரவணக்குமார்‌, செயற்பொறியாளர்‌ (தெற்கு) சுந்தர்ராஜ்‌, உதவிப்‌ பொறியாளர்‌ கனகராஜ்‌, மண்டல சுகாதார அலுவலா்‌ லோகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...