கோவை கணபதி அருகே குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட குழியை மூடாததால் தொடரும் விபத்துக்கள்..! உடனடியாக மூட பொதுமக்கள் கோரிக்கை!

கோவை: கோவை கணபதி பகுதியில் குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கணபதி பகுதியில் பழைய சத்தி ரோடு பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் செல்ல கூடிய குடிநீர் குழாய் பாதிப்பு ஏற்பட்டது. அதை சரி செய்யாமல் கடந்த 15 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்தது. பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். குடிநீர் சாலை வழியாக ஆறாகச் சென்று கொண்டிருந்தது.

இதன் பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சாலையின் மையப்பகுதியில் குழிதோண்டி குடிநீர் குழாயினுடைய இணைப்பை சரி செய்தனர். அதன் பிறகு வேலையை அப்படியே போட்டுவிட்டு சுற்றி கற்களை எடுத்து வைத்து விட்டுச் சென்றனர். மேலும், மண்ணைப் போட்டு மூடி விட்டுச் சென்று விட்டனர்.

இந்த நிலையில், குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்ட சாலையின் மையப்பகுதியில் பெரிய குழிகள் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணம் செய்கின்றனர்.

தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் மாலை நேரங்களில் அந்தப் பகுதியில் தெருவிளக்கும் இல்லாததால், குழிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகி காயங்களுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு குடிநீர் குழாயை சரி செய்வதற்காக தோன்றிய பள்ளத்தை உடனே மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...