கோவை கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் முறைகேடு: அரசு அலுவலர்கள் கொந்தளிப்பு!

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்லும் அரசு ஊழியர்கள் அலைக்கழிக்க படுவதாகவும், ஆனால் வெளியாட்கள் பலர் எந்தவித தடையும் இன்றி வந்து ஊசி போட்டுச் செல்வதாகவும் கூறும் அரசு அலுவலர்கள், தடுப்பூசி செலுத்துவதில் முறைகேடு நடப்பதாகவும் கொந்தளிக்கின்றனர்.


கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்லும் அரசு ஊழியர்கள் அலைக்கழிக்க படுவதாகவும், ஆனால் வெளியாட்கள் பலர் எந்தவித தடையும் இன்றி வந்து ஊசி போட்டுச் செல்வதாகவும் கூறும் அரசு அலுவலர்கள், தடுப்பூசி செலுத்துவதில் முறைகேடு நடப்பதாகவும் கொந்தளிக்கின்றனர்.

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் செயல்படுகின்றன. கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அலுவலகம்(Covid War Room) அருகே தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்லும் அரசு ஊழியர்கள் அலைக்கழிக்கப் படுவதாகவும், ஆனால், வெளியாட்கள் பலர் எந்தவித தடையும் இன்றி வந்து ஊசி போட்டுச் செல்வதாகவும் அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது, ‘‘தற்போது அனைத்து அரசு அலுவலகங்களும் முழுவீச்சில் செயல்படத் தொடங்கி உள்ள சூழ்நிலையில், ஒவ்வொரு துறை தலைமையகத்தில் இருந்தும் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தடுப்பூசி முகாமுக்கு அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் செல்கின்றனர். ஆனால், தடுப்பூசி செலுத்தும் முகாமில் உள்ள பணியாளர்கள் அரசு ஊழியர்களிடம், ‘‘இன்று வேறு துறைக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதனால், நாளை வாருங்கள்'' என்று கூறுவதும், மறுநாள் செல்லும் ஊழியர்களிடம், ‘‘உங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து கடிதம் பெற்று வாருங்கள்'' என்று கூறி தொடர்ந்து அலைக்கழிக்கின்றனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களிடம் கொண்டுள்ள அரசு அடையாள அட்டை போதாதா. இதுகுறித்து கேட்டால், சரிவர பதில் கிடைப்பதில்லை. அரசு ஊழியர்களின் நிலைமை இவ்வாறு இருக்கும் நிலையில், வெளியாட்கள் பலர் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்து எந்தத் தடையும் இன்றி சிறப்பு முகாமில் தடுப்பு ஊசி செலுத்திச் செல்கின்றனர்.

தலைமை அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தனியார் சார்பில் நடத்தப்படும் முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நடக்கும் குளறுபடிகள் குறித்து, கலெக்டரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கலெக்டர் அலுவலகத்திலேயே முறைகேடுகள் நடப்பது மிகவும் வருந்தத்தக்கது.

எனவே, பிரச்சினைக்கு தீர்வுகாண கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதுவே அனைத்து அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாகும்'' என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...