பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்: கையகப்படுத்தப்பட்ட 23 ஏக்கர் நிலத்துக்கு ரூ.20 கோடி இழப்பீடு!

கோவை: பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிக்காக கையகப்படுத்தப்பட்ட 23 ஏக்கர் நிலத்திற்கு ரூ.20 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.


கோவை: பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிக்காக கையகப்படுத்தப்பட்ட 23 ஏக்கர் நிலத்திற்கு ரூ.20 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டு, பில்லூர் 3 வது குடிநீர் திட்டம் ரூ.970 கோடி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்காக மொத்தம் 113 ஏக்கர் நிலங்கள் விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து கையகப்படுத்த உள்ளன. இதற்காக ரூ.105 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நிலங்கள் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது வரை நில உரிமையாளர்களுக்கு ரூ.20 கோடி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டு, 23 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் குடிநீர் கிடைத்து வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை, நிறுவனங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தினமும் மாநகராட்சிக்கு 178 எம்எல்டி குடிநீர் கிடைக்கும் வகையில் பில்லூர் 3வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இதற்காக குடிநீர் எடுக்கும் இடத்தில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடம் வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கபாதை அமைத்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேலும் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக 30 ஏக்கர் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டது.

அதேபோல, தனியாரிடம் இருந்து 113 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். இதில் முதற்கட்டமாக 135 நில உரிமையாளர்களிடம் இருந்து 23 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கி நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...