கோவை: குமாரசாமி காலனியில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோயிலை இடித்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அனுமதி கோரியுள்ளது.

குமாரசாமி காலனியில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோயிலை அப்பகுதி பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, காவல் துறையின் துணையோடு இடித்து தரைமட்டமாக்கிய மாநகராட்சி நிர்வாகத்தின் செயலை விஸ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது.
நேற்று இரவு அப்பகுதி பொதுமக்கள் இந்து இயக்க பொறுப்பாளர்களிடம் சமாதானம் பேசிய மாநகராட்சி நிர்வாகம் இன்று அதிகாலை கோயிலை இடித்தது பக்தர்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கோயில் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் இந்து விரோத போக்கை கண்டித்தும், இந்து கோயில்களை மட்டும் குறிவைத்து ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதை கண்டித்தும், இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் மீண்டும் கட்டித்தர கோரியும் நாளை 14.07.2021 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு கோவை காந்திபார்க் ரவுண்டானா அருகில் தனி மனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம் செய்துள்ளது.
எனவே, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருமாறு மாநகர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.