கோவையில் பண மோசடியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

கோவை: கோவையில் பண மோசடியில் ஈடுபட்ட பீளமேடு மின்வாரிய ஊழியா்கள் இருவா் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: கோவையில் பண மோசடியில் ஈடுபட்ட பீளமேடு மின்வாரிய ஊழியா்கள் இருவா் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மின்வாரியம் பீளமேடு கிழக்குப் பிரிவு அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருபவா் முருகேசன். அதே அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராகப் பணியாற்றுபவா் சாதிக் அலி. இவா்கள் இருவரும், பீளமேடு அலுவலகத்துக்கு மின்கட்டணம் செலுத்த வரும் மின்நுகா்வோரிடம் கம்ப்யூட்டர் பழுதடைந்துவிட்டது, பணத்தை கொடுத்துவிட்டுச் சென்றால், அதைச் செலுத்திவிட்டு பின்னா் ரசீது வழங்குவதாகக் கூறி பலரிடமும் பணத்தைப் பெற்று, அதை மின்வாரியத்துக்கு செலுத்தாமல் இருந்துள்ளனா். அதேபோல கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வருபவா்கள் உள்ளிட்டோரிடமும் பணத்தைப் பெற்று மோசடி செய்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த அலுவலகத்தில் பல முறைகேடுகள், மோசடிகள் நடைபெறுவது குறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் லோகு, தலைமைப் பொறியாளா், மேற்பார்வைப் பொறியாளா் உள்ளிட்டோரிடம் புகார் அளித்திருந்தார்.

இருப்பினும், அது தொடா்பான விசாரணை நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் பீளமேடு பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் இவா்கள் இருவரும் பண மோசடி செய்துள்ளனா். இதையடுத்து பாதிக்கப்பட்டவா் மின்வாரிய உயா் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இது தொடா்பாக விசாரணை நடத்திய கணக்குப் பிரிவு அலுவலா்கள், மோசடி நடைபெற்றிருப்பதை உறுதி செய்தனா். இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு அறிக்கை சமா்ப்பித்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட வருவாய் மேற்பார்வையாளா் முருகேசன், கணக்கீட்டு ஆய்வாளா் சாதிக் அலி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், அந்த அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராகப் பணியாற்றிய பெண் ஒருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதை உறுதி செய்துள்ள உயா் அதிகாரிகள், மோசடி தொகை எவ்வளவு என்பது தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே, இந்த அலுவலகத்தில் நடைபெற்றுள்ள அனைத்துவிதமான மோசடிகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் லோகு வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...