கிரிக்கெட் முன்விரோதத்தில் மோதல் அரிவாளால் வெட்டிய ஆறு பேர் கோவை கோர்ட்டில் சரண்..!

கோவை: கோவையில் கிரிக்கெட் முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலால் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் கோவை ஜே.எம் -2 குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.


கோவை: கோவையில் கிரிக்கெட் முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலால் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் கோவை ஜே.எம் -2 குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(31). தனியார் நிறுவன ஊழியர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் தனது தம்பி சூர்யாவைத் தாக்கியதாகக் கூறி கடந்த 8ஆம் தேதி செல்வா என்பவரை கார்த்திக் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவரும் மது போதையில் இருந்த நிலையில் கார்த்திக், செல்வாவை அவதூறாகப் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து செல்வா தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக செல்வா உள்பட 7 பேர் 5 பைக்குகளில் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கார்த்திக்கை தேக்ச் சென்றனர்.

உடையாம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே இருந்த கார்த்தியைக் கண்டதும் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்க்ச் சென்றனர். இதுகுறித்து சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய பீளமேடு புதூரைச் சேர்ந்த அரவிந்த்(20) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கும்பலை போலீஸார் தேடிவந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான செல்வப்பெருமாள், மனோஜ், நந்தகோபால், ஜெயராஜ், பிரவீன், அஸ்வின் ஆகிய 6 பேர் இன்று கோவை ஜே.எம்-2 குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...