கோவை காட்டூர் காவல் நிலையத்தில் கொரோனா கூடாரம் அகற்றம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனையொட்டி, கோவை காட்டூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை கூடாரம் கொரோனா பரவல் குறைந்த நிலையில், தற்போது அகற்றப்பட்டது.


கோவை: கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனையொட்டி, கோவை காட்டூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை கூடாரம் கொரோனா பரவல் குறைந்த நிலையில், தற்போது அகற்றப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் உக்கிரமாக தாக்கிய நிலையில், கோவையில் தமிழகத்திலேயே அளவுக்கு அதிகமான எண்ணிக்கை காணப்பட்டது. அதனால் அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கொரோனா சிகிச்சை அளிக்க தங்களுடைய இடங்களை கொடுத்து உதவினார். சமூக சேவை அமைப்பினர் தங்களுடைய திருமண மண்டபங்கள் உட்பட அரசு கலைக் கல்லூரிகள், கொடிசியா வளாகம், ரயில் பெட்டிகள் என அனைத்தும் கொரோனா உடைய சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன.

இதனால் கோவையில் பல்வேறு விதமான அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்தது. இதுபோக கஷ்டப்படக் கூடிய மக்களிலிருந்து உயர்பதவியில் இருக்கக்கூடியவர்கள் வரை கூட கொரோனா விட்டுவைக்கவில்லை. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினர். அவர்கள் இந்த நிலையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் வாசலில் மனுக்களை பெறுவதற்காக தனி கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. மனு கொடுக்க வரக்கூடிய மக்களை வெளியில் வைத்து அங்குள்ள ஏட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மனுக்களை பெற்று அங்கு தீர்வு காணப்பட்டு வந்தது.

இப்பொழுது கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக முடிவுக்கு வந்து தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது. ஆதலால், கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்கு வாசலில் அமைக்கப்பட்டிருந்த கோரோனா கூடாரம் நேற்று முறைப்படி அப்புறப்படுத்தப்பட்டது. ஆதலால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இனி நேரடியாக உள்ளே சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பார்த்து மனு கொடுக்க ஏதுவாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...