திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்து அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவ்வழியே சென்ற பொது மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு இருந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்களைப் பிடிக்க முற்பட்டபோது, ஐந்து இளைஞர்களில் இரண்டு பேர் தப்பி ஓடவே, மதுபோதையில் இருந்த மற்ற மூன்று பேரை பிடித்து கயிறு மற்றும் அவர்கள் அணிந்து வந்த சட்டைகளால் அவர்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்.
மேலும், காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் அவ்வழியே செல்லும் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதோடு, பணம் தர மறுத்த முதியவர் ஒருவரின் வயிற்றை கத்தியால் கிழித்தும் கல்லால் தாக்கியும் காயப்படுத்தியுள்ளனர்.

ரத்த காயத்துடன் இருந்த அவரை பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

குற்றம் புரிந்த மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர் தப்பியோடிய இரண்டு பேர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.