கிணத்துக்கடவு அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டடத்தை இடிக்கும் போது மேற்கூரையில் இருந்து விழுந்த கிராம உதவியாளர்..!

கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டடத்தை இடிக்கும் போது மேற்கூரையில் இருந்து விழுந்த கிராம உதவியாளரால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டடத்தை இடிக்கும் போது மேற்கூரையில் இருந்து விழுந்த கிராம உதவியாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தில் கள்ளு மேடு என்ற இடத்தில் வருவாய்துறைக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக ரீதியாக கட்டடங்கள் கட்டி ஒரு வருடங்களுக்கு மேலாக உபயோகித்து வந்தார்.

இந்தநிலையில், அப்பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை ஊராட்சி நிர்வாகத்தினர் தேர்வு செய்தனர்.



ஆனால், தங்கவேல் அந்த நிலத்தை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இன்று கோவை மாவட்ட துணை ஆட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.



வணிக ரீதியாக அந்த அரசு நிலத்தை தங்கவேல் உபயோகித்து வந்ததால் அப்பகுதியில் கட்டப்பட்ட கட்டடத்தை இன்று வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளி மீட்டனர்.

அப்போது அங்கிருந்த கட்டடத்தின் மேல் கூரையில் ஏறி நின்று ஓட்டைப் பிரிக்கச் சென்ற கிராம உதவியாளர் சண்முகம் ஓடு உடைந்தால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர், அங்கிருந்த வருவாய்த் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...