கோவையில் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கையாக, பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு சரிபார்க்கும் பணியில் ஏழாயிரம் பணியாளர்கள்..!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று மூன்றாவது அலையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று மூன்றாவது அலையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் பணியில் ஏழாயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. குறிப்பாக கோவை மாநகராட்சியில் 70 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 42 சதவிகிதம் பேர் மட்டுமே மாநகராட்சி பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மாநகராட்சி மற்றும் ஊரக பகுதியில் தொற்றை கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சளி, காய்ச்சல் கண்டறியும் பணியுடன் பொதுமக்களின் உடலில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 7,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘‘கொரோனா இரண்டாவது அலையில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதால் அவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்கள் உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிடும் பணியில் 4,500 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், ஊரக பகுதியில் 2,500 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேருக்கு ஒரு ஆக்சி மீட்டர் வீதம் வழங்கப்படுகிறது. இந்தப் பணியாளர்கள் பொதுமக்களின் விரலில் ஆக்சி மீட்டரை பொருத்தி ஆக்சிஜன் அளவை கணக்கிடுவார்கள். ஆக்சிஜன் அளவு 95-க்கு கீழ் இருந்தால், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதேபோல் சளி, காய்ச்சல் உள்ளதா? என்றும் கண்டறிவார்கள்.'' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...