வேன் விற்பனை செய்வதாகக் கூறி கேரள இளைஞர்களை கடத்தி ரூ.3.60 லட்சம் பணம் கொள்ளை... ஏழு பேர் கைது..!

கோவை: கோவை மதுக்கரை அருகே வேன் விற்பனை செய்வதாக இணைய தளம் மூலம் கூறி, கேரளாவைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்தி ரூ.3.60 லட்சம் கொள்ளையடித்த ஏழு பேரை மதுக்கரை தனிப்படை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே வேன் விற்பனை செய்வதாக இணைய தளம் மூலம் கூறி, கேரளாவைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்தி ரூ.3.60 லட்சம் கொள்ளையடித்த ஏழு பேரை மதுக்கரை தனிப்படை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜித்(41). தனியார் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சொந்தமாகப் பயன்படுத்திய வேனை வாங்க இணையதளத்தில் சோதனை செய்துள்ளார். அதில் ஒ.எல்.எக்ஸ் இணைய தளம் மூலம் சாஜின் என்பவர் பழக்கம் ஆகி, தன்னிடம் உள்ள வேனை விற்பனை செய்வதாகக் கூறி கோவைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து வேனை வாங்குவதற்காக கடந்த புதன்கிழமை சுஜித் தனது நண்பர்களான சுனில்(53), ராபின் (32), விஜித் (26), ராஜேஸ் (46), ஆகியோருடன் கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதிக்கு வாடகை காரில் வந்துள்ளனர்.

அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் சுஜித், மற்றும் சுனில் ஆகிய இருவரை மட்டும் போடிபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு வேனை காண்பித்துள்ளனர். இதையடுத்து மதுக்கரை அருகே உள்ள வாடகை வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்ற கும்பல், அங்கிருந்த மேலும் சிலருடன் சேர்ந்து சுஜித் மற்றும் சுனிலை தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் வேன் வாங்க வைத்திருந்த ரூ.3.16 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு, சுனில் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கிச் சென்று அதிலிருந்து ரூ.45 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், கைகடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, இருவரையும் ஆடையில்லாமல் புகைப்படம் எடுத்துவிட்டு, கொச்சின் நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு சுஜித் வந்த வாடகை காருடன் தப்பிச் சென்றனர். இதையடுத்து இருவரும் வாடகை ஆட்டோ பிடித்து தனது மற்ற நண்பர்கள் உள்ள இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து செட்டிபாளையம் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். வழக்கை விசாரித்த போலீஸார் மதுக்கரை காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றினர். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.



முதல் கட்ட விசாரணையின் போது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்கிற ஐயப்பன்(35) என்பவரை கைது செய்தனர். அவரை வைத்து கேரளாவில் பதுங்கி இருந்த பாலக்காட்டை சேர்ந்த சாஜன்(26), அஜித்(19), மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது சலீம்(22), அஜ்மல் கான்(29), அன்சார்(30), ராஜேஷ்(29) ஆகியோரை தனிப்படை போலீஸார் கேரளாவில் வைத்து கைது செய்தனர். மேலும், ஏழு பேரையும் விசாரணைக்கு பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...