கோவை: கோவையில் நடந்த பெட்ரோல் பங்க் மற்றும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுக்கான தேர்வு, குலுக்கல் முறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், இது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் புகார் அளிக்க உள்ளதாக கோவை எம்.பி, பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் நடந்த பெட்ரோல் பங்க் மற்றும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுக்கான தேர்வு, குலுக்கல் முறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், இது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் புகார் அளிக்க உள்ளதாக கோவை எம்.பி, பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று BPCL, IOCL, HPCL ஆகிய பெட்ரோலிய நிறுவனங்கள் சார்பில் பெட்ரோல் பங்க் மற்றும் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுக்கான தேர்வு, குலுக்கல் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குலுக்கள் நிகழ்வுக்கு பார்வையாளராக கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அழைக்கப்பட்டிருந்தார். இன்று காலை குலுக்கல் நடைபெறும் நேரமான 9.30 மணிக்கு மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வந்தபோது குலுக்கல் எதுவும் நடைபெறவில்லை. மேலும், பெட்ரோலிய நிறுவன உயர் அதிகாரிகள் யாரும் அங்கு இல்லாமல் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.
நீண்டநேரம் அதிகாரிகளுக்காக காத்திருந்த மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘‘குலுக்கல் காலை 9.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் குலுக்கள் எதுவும் நடைபெறவில்லை'' என்றவர், விநியோகஸ்தர்கள் தேர்வானது முறையாக நடக்காமல் முறைகேடு நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். இன்று நடைபெறுவதாக இருந்த குலுக்களை வேறு ஒரு தினத்தில் மாற்றி முறையாக நடத்த வேண்டும் எனவும், இந்த முறைகேடு தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவத்த அவர், இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தெரிவித்தார்.