கோவை: கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க அதனைக் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். இதுகுறித்து, கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் முன்களப்பணியாளார்கள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., இன்று 13.07.2021 நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.49 இரத்தினபுரி நேரு பூங்கா வளாகத்தில் முன்களப்பணியாளாகள் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனைகளை கண்டறியும் பணிகளில் ஈடுபடும்போது, சளி, காய்ச்சல், இருமல் குறித்த விவரங்களை கோவிட்-19 கள ஆய்வுப் பதிவேடுகளில் பதிவு செய்திட வேண்டும். இதன் மூலம் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களை பரிசோதனை செய்யும்போது கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடியாக சிகிச்சை அளித்து காப்பற்றப்படுகிறது. ‘‘இத்தகைய பணிகளை நீங்கள் மிகச்சிறப்பாக செய்திட வேண்டும். களப்பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'' என அறிவுறுத்தினார்கள்.
மேலும், ‘‘தற்போது மழைபெய்யும் சூழல் நிலவி வருவதாலும், விட்டு விட்டு மழை பெய்வதாலும் கொசுக்களால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க, முன்களப்பணியாளர்கள் வீடுகளில் உள்ள பொதுமக்களிடம் வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், ஆட்டுக்கல், மொட்டை மாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருட்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருட்கள், சரியாக மூடப்படாத தரைத்தொட்டி, மேல்நிலைத்தொட்டி, டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு அது புழுவாக மாறி வாழ்ந்து கொசுவாக மாறுகிறது. இதன் மூலம் நோய் பரவ காரணமாகிறது. எனவே, வீட்டில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டி, ட்ரம்களை மூடி வைக்க வேண்டும்'' என முன்களப்பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, வார்டு எண்.72க்குட்பட்ட நஞ்சப்பா சாலை ஜெயில்ரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் கர்ப்பிணித் தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்தும், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும், புற நோயாளிகளின் பதிவேடு மற்றும் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்த பின்னர் அங்குள்ள பராமரிப்பு பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்௧ரா இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளார் சிவசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.