கோவை: தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து வால்பாறை பொள்ளாச்சி சாலையில் கல் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி கருமலை மலைச்சாலையில் உள்ள அக்காமலை பாலாஜி கோயில் சுற்றுலாத்தலமாக உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அக்காமலை பாலாஜி கோயிலுக்கு வந்து செல்கின்றன. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறுகிய சாலைப் பகுதிகள் அகலப்படுத்தப்பட்டு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக வால்பாறை கருமலை சாலையில் பச்சமலை எஸ்டேட் அருகே சாலைகளில் நீரூற்று ஏற்பட்டு சாலைகள் அடிக்கடி பழுதாகின்றன. இதனைத் தவிர்க்க, ‘‘பொக்லைன் இயந்திரம் மூலம் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, சாலைகளில் கல் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் எவ்வித இடையூறும் இன்றி வாகனங்கள் சென்று வர ஏதுவாகும்'' என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர். மேலும், வால்பாறையிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அனைத்து சாலைகளிலும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.