பொள்ளாச்சியில் குப்பை வண்டியில் கபசுரக் குடிநீர் வழங்கிய நகராட்சி நகர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு..!

கோவை: பொள்ளாச்சியில் குப்பை வண்டியில் கபசுரக் குடிநீர் வழங்கிய நகராட்சி நகர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் குப்பை வண்டியில் கபசுரக் குடிநீர் வழங்கிய நகராட்சி நகர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட விஜயபுரம் பகுதிக்கு கடந்த 10ஆம் தேதி நகராட்சி அதிகாரிகள் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கபசுரக் குடிநீரை நகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு சென்றதால் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வாகனத்தை சிறை பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகர்நல அலுவலரை தொடர்பு கொண்டு பேசியபோது குடிசைப் பகுதி என்பதால், அவசரத்திற்கு குப்பை வண்டியில் கபசுரக் குடிநீர் அனுப்பி வைத்ததாக, அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.



இதனால் சம்பந்தப்பட்ட நகர்நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று விஜயபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் விடம் புகார் மனு அளித்துள்ளனர்.

குடிசைப் பகுதி என்பதால் குப்பை வண்டியில் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என்று சாதிய கண்ணோட்டத்தோடு நகர்நல அலுவலர் கூறியிருப்பது மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...