சென்னை: தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை: தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை; சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
அதிக தேவை இருக்கும் நிலையில், குறைவான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்குவதால் தட்டுப்பாடு நிலவுகிறது; கோவை, ஈரோட்டில் நள்ளிரவு முதலே தடுப்பூசிக்காக மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
குஜராத்தில் 1000 பேருக்கு 533 தடுப்பூசிகள் என்ற கணக்கில் வழங்கப்படும் போது, தமிழ்நாட்டில் 302 தடுப்பூசிகளே வழங்கப்படுகிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.