கொரோனா சிகிச்சை மையத்தில் படுகர் இன பாடலுக்கு நடனமாடி நோயாளிகளை மகிழ்விக்கும் நர்ஸ்..!

கோவை: கொரோனா சிகிச்சை மையத்தில் படுகர் இன பாடலுக்கு நடனமாடிய நோயாளியை மகிழ்விக்கும் நர்ஸின் வீடியோ வைரல் ஆனதால் மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


கோவை: கொரோனா சிகிச்சை மையத்தில் படுகர் இன பாடலுக்கு நடனமாடிய நோயாளியை மகிழ்விக்கும் நர்ஸின் வீடியோ வைரல் ஆனதால் மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அச்சத்தைப் போக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும், யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் செவிலியர்கள் நடனமாடி அவர்களது மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினார். நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைத்து வருகிறார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்கள் அந்த நர்சுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...