கோவை: பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல்குவாரியை தடை செய்யக் கோரி கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த சோழபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.சந்திராபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அனுமதி இன்றி செயல்படும் கல் குவாரிகளை மூடக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, ‘‘இக்கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரண்டு கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. குவாரியில் கல் வெட்டி எடுப்பதற்காக அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை உபயோகிப்பதால், கற்கள் சிதறி அருகில் உள்ள வீடுகள், விளைநிலங்கள், பொது வண்டிப்பாதை மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பிஏபி வாய்க்கால் ஆகியவற்றின் மீது விழுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் வீடுகள், தண்ணீர் தொட்டிகள், கிணற்றின் மேல்மட்ட தடுப்புச்சுவர் ஆகியவற்றில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுகின்றன. மேலும், வெடி வைத்த பின் ஏற்படும் புகைமூட்டம், பாறை துகள்கல் ஆகியவற்றால் காற்று மாசுபாடு ஏற்பட்டு, பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகின்றன.
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வருவாய்த்துறை, கனிமம், புவியியல் துறை மற்றும் மாசு கட்டுப்பாடு ஆகிய துறை அதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டதன் பேரில் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து இரண்டு குவாரிகளும் இயங்க தடை விதித்தனர்.
அதன் பின்னரும் கல்குவாரி இயங்கி வந்ததால் கனிமம் மற்றும் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் கல்குவாரி கள ஆய்வு செய்து அபராதமும் விதித்தனர். மேலும் எஸ்.சந்திராபுரம் கிராமசபை கூட்டத்தில் மூன்று முறை கல்குவாரி செயல்படக்கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, கல் குவாரிகள் சம்பந்தமான தொழில்களுக்கு அனுமதி வழங்கினால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, கல் குவாரிகளை மூட வேண்டும்'' என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.