பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி ஆர்ப்பாட்டம்..!

கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் பகவதி தலைமையில் காந்தி சிலை சிக்னல் பகுதியில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகனங்களை இயக்க முடியாது. சைக்கிளில்தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளதை, உணர்த்தும் வகையில் சைக்கிள்களில் மார்க்கெட் ரோடு, ராஜா மில் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

பின்னர், திருவள்ளுவர் திடலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...