வால்பாறையில் இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்க தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு..!

கோவை: வால்பாறையில் இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்க தலைவர்களின் கூட்டுக்குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


கோவை: வால்பாறையில் இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்க தலைவர்களின் கூட்டுக்குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், இந்தமாதம் முதல் தேதியிலிருந்து புதிய சம்பள ஒப்பந்தம் தொழிற்சங்க தலைவர்களுடன் சம்பந்தப்பட்ட தனியார் தேயிலைத் தோட்ட அதிபர்கள் ஏற்படுத்த வேண்டும். அதன்படி, இந்தப் புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு தோட்ட அதிபர்கள் யாரும் அழைக்காததால் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பாக கடந்த எட்டாம் தேதி முதல் ஒவ்வொரு தோட்ட அலுவலகங்களின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது.

அதன்படி முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன் தொழில் அதிபர்கள் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று வால்பாறையில் உள்ள தனியார் ஹோட்டலில் அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் கூட்டுக்குழுவின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் எல்.பி.எப்.தொழிற்சங்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், தொழிற்சங்க தலைவர் சௌந்தரபாண்டியன், ஏஐடியுசி மோகன், ஐஎன்டியூசி கலைவாணன் என்ற சாலிக், விடுதலை சிறுத்தை வீரமணி, கேசவமருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் புதிய சம்பள ஒப்பந்தம் பற்றி தமிழக அரசு மூலம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று எல்.பி.எப். தொழிற் சங்கத்தின் பொதுச்செயலாளர் வினோத்குமார் கேட்டுக்கொண்டுள்ள நிலையில், தோட்ட அதிபர்களும் கொரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே, கூட்டுக்குழுவின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களுடன் கோரிக்கை சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்திருப்பதாலும் சம்பள பேச்சுவார்த்தைக்கு அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொள்வதெனவும் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏஐடியுசி பெரியசாமி, மாணிக்கம், எல்பிஎப். த.ம.செந்தில்குமார், பாஜக தங்கவேல், செந்தில் முருகன், கார்த்தி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் சிஐடியு பரமசிவம் நன்றி கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...