கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க செய்திகள் வெளிவருவது கண்டனத்துக்குரியதாகும்..!

கோவை: தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகைகள், காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதற்கு கோவை மாநகர் மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகைகள், காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவதற்கு கோவை மாநகர் மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களாலும் பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் கலைஞர் அவர்களாலும் பண்படுத்தப்பட்ட மாநிலமாகும்.

பிரிவினை வாத சக்திகள் தமிழகத்திலுள்ள கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பத்திரிகைகள், காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவது கண்டனத்துக்குரியதாகும்.

அமைதியும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் தமிழக மக்களிடையே வெறுப்பு அரசியலை ஏற்படுத்தும் விஷம திட்டத்தை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.

அனைத்து வகையான தொழில்களும், செழிப்பான விவசாயமும், சிறந்த மருத்துவ கட்டமைப்பும், தலைசிறந்த கல்வி நிறுவனங்களும் உள்ள மேற்கு மாவட்ட மக்களிடம் பிரிவினைவாத திட்டம் ஒரு போதும் வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல, அரசியல் ஆதாயத்திற்காக தூவப்படும் இந்த விஷம விதைகளை அரசியல், கட்சி எல்லைகளைக் கடந்து தமிழக மக்கள் முறியடிப்பார்கள்'' என கோவை மாநகர் மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...