கோவை: கேரளாவில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வீரப்பகவுண்டனூர் தமிழக எல்லைப் பகுதியில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வர பல்வேறு கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் கேரளாவிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வருபவர்களைத் தீவிர சோதனை செய்து, இ-பாஸ் வைத்திருப்பவர்களை மட்டும் அனுமதித்தனர்.

மேலும், இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை மீண்டும் கேரளப் பகுதிக்குள் திருப்பி அனுப்பினர்.
இதனிடையே தமிழக கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று வர இ-பாஸ் நடைமுறையால் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், எனவே, எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சில தளர்வுகள் அளிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.