வால்பாறையில் மழைக் காலப் பேரிடர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..!

கோவை: வால்பாறையில் மழைக் காலப் பேரிடர் நிகழ்வு ஆலோசனைக் கூட்டம் வட்டாசியர் அலுவலகத்தில் நடை பெற்றது.


கோவை: வால்பாறையில் மழைக் காலப் பேரிடர் நிகழ்வு ஆலோசனைக் கூட்டம் வட்டாசியர் அலுவலகத்தில் நடை பெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் மழைக் காலப் பேரிடர் பேராண்மை நிகழ்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வால்பாறை வட்டாசியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் ஆய்வு குழு அலுவலர் துரைசாமி முன்னிலையில் வட்டாட்சியர் ராஜன் ஓய்வு ஊதியம் தாசில்தார் முத்துக்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது.



இதில் மருத்துவர்கள், மின்சாரத் துறை அலுவலர், வனத் துறை அலுவலர், கல்வித் துறை அலுவலர், தீ அணைப்புத் துறை, அலுவலர் நகராட்சி அலுவலர், காவல் துறை அலுவலர் பொதுப் பணித் துறை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மழைக் காலங்களில் ஆற்றங்கரை ஓரத்தில் குடியிருக்கும் பொது மக்களை வெள்ள அபாயம் காலங்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்க, வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைத் தேர்தெடுக்கப்பட்டு உள்ளது. அதற்குத் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, போன்றவைகளை சரி செய்து கொள்ளவேண்டும் என கூறப்பட்டது. குடியிருப்புகள், பள்ளிகள் அருகில் உள்ள விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டவும் ஆதிவாசி, பழங்குடி மக்கள் கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்கள் மற்றும் மண் சரிவு ஏற்படும் இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. வால்பாறை காவல் அதிகாரிகள் வால்பாறை மற்றும் சோலையார் அணை பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் வெள்ள பேரிடர் நிகழ்வில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவத் துறையின் மூலம் தற்போது வரை வால்பாறை பகுதியில் 13 ஆயிரம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 10 நாட்கள் மட்டும் தடுப்பு ஊசி வால்பாறை பகுதிக்கு வரவில்லை என்றும் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு தடுப்பு ஊசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதை மருத்துவர்கள் வனத்துறை ஒத்துழைப்பில் அனைவருக்கு முகாம் நடத்தி கொரோனா தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என்று தெரியப்படுத்தப் பட்டது. மின்சாரத் துறை சம்பந்தப்பட்ட நேரங்களில் மின் தடை ஏற்படுவதை சரி செய்ய வேண்டும். மரங்கள், மின் கம்பிகள் மேல் விழுந்தால் அதை பொது மக்களுக்கு தகவல் தெரிவித்து 1 மணி நேரத்தில் அதை சரி செய்ய வேண்டும். சின்னக்கல்லார் வனப் பகுதியில் மின் கம்பிகள் மரங்கள் மீது விழும் நிலையில் உள்ள மரங்களை வனத்துறை இணைந்து சரி செய்ய வேண்டும் என்று தெரியப்படுத்த வேண்டும்.



மேலும், வால்பாறையில் பொது மக்களுக்கு வெள்ள அபாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கிய வேலையாக நகராட்சி செய்ய வேண்டும். மேலும், வால்பாறை அருகே கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மற்றும் மழைக் காலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் குளிக்கத் தடைசெய்ய வேண்டும். இதில், கூழாங்கல் ஆற்றில் வனத் துறையும் காவல் துறையும் இணைந்து அங்கு ஷெட் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டது. தீ அணைப்புத் துறைக்கு வெள்ளப் பேரிடர் காலங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், காவல் துறை நகராட்சி அலுவலகம் போன் எண் கொடுக்கப்பட்டு, அவசர காலங்களில் அழைக்க தொலை பேசி எண்:1077 மேலும், வால்பாறை வட்டாட்சியர்:9445000577 என்ற எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...