கிணத்துக்கடவு அருகே சம்பளம் பாக்கி வாங்கி வருவதாகச் சென்ற இளம்பெண் மாயம்..!

கோவை: கிணத்துக்கடவு அருகே சம்பளம் பாக்கி வாங்கி வருவதாகச் சென்ற இளம்பெண் மாயமானார். இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே சம்பளம் பாக்கி வாங்கி வருவதாகச் சென்ற இளம்பெண் மாயமானார். இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குமாரபாளையம் பகுதியில் கணவர் குப்புசாமியுடன் வசித்து வருபவர், சரஸ்வதி(50). இவருடைய இரண்டு பெண்கள் படிப்பை முடித்துவிட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், இளைய மகள் அருள்பிரியா (வயது 21) ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்த அருள்பிரியா கடந்த 10ஆம் தேதி காலை, தான் பணியாற்றிய கம்பெனியில் சம்பளம் பாக்கி வாங்கி வருவதாக அவரது தந்தை குப்புசாமியிடம் கூறிக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சம்பளம் வாங்கி வருவதாகச் சென்ற அருள்பிரியா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடியும் அருள்பிரியா கிடைக்காததால் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று ஜூலை 11-ஆம் தேதி அருள் பிரியாவின் தாயார் சரஸ்வதி, காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பெற்றோர்களுடன் விசாரணை நடத்தி ஜூலை 11ஆம் தேதி இரவு வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அருள்பிரியாவைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...