கொரோனா தடுப்பு நடவடிக்கை: வால்பாறையில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்கல்!

கோவை: வால்பாறையில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.


கோவை: வால்பாறையில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணத்தினால் அரசு அலுவலகங்கள், காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்க அரசு அறிவுறுத்தல் செய்தது.

கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொது குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பெரும் தொற்று காலம் என்பதால் மக்கள் கூட்டமாக வருவார்கள் என்று கொரோனா தொற்று பரவாமல் இருக்க முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க, அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் காணொளி மூலம் நடைபெறும் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வால்பாறையில் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு குழு அலுவலர் தலைமையில் வட்டாட்சியர் ராஜன் மற்றும் ஓய்வு ஊதியம் வட்டாட்சியர் முத்து குமார் அவர்கள் முன்னிலையில் 2 மனுக்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார்.



வால்பாறை அருகே ஐயற்பாடி எஸ்டேட் சேர்ந்த மாற்று திறனாளி குமார் என்பவருக்கு வங்கி கடன் வழங்கவும் மாதம் தோறும் ஓய்வு ஊதியம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.



அதனை உயர்த்தி 1500 ரூபாயாக வழங்க வேண்டும் என்றும், அவருக்கு சொந்தமாக வீடு இல்லாமல் உள்ளதால் வீட்டு மனை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.

அதேபோல, வாழைத் தோட்டம் பகுதியில் குடியிருக்கும் லைலா பேபி (46) அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...